/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி 23 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி 23 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சி 23 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சி 23 மொபைல் போன்கள் ஒப்படைப்பு
ADDED : ஏப் 14, 2025 04:13 AM

புதுச்சேரி:சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட 23 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி., ரங்கநாதன் தலைமை தாங்கி, சைபர் கிரைம் தொடர்பான புகாரை கேட்டறிந்தார்.இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில், 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். சிலர் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை விரைவில் மீட்டுத்தர கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 23 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், சைபர் குற்றங்களான போலியான உடனடி கடன் செயலி, ஆன்லைன் வர்த்தகம், மும்பை போலீஸ், சி.பி.ஐ., அதிகாரிகள் பேசுவதாக கூறி ஏமாற்றுவது, இணையதளத்தில் வரும் செய்திகளை உண்மை தன்மை அறியாமல் நம்ப வேண்டாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

