/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி: டி.ஐ.ஜி., பங்கேற்பு
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி: டி.ஐ.ஜி., பங்கேற்பு
ADDED : மார் 30, 2025 03:30 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி, போலீஸ் ஸ்டேஷன்களில் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கு, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தார்.
இதில், கிழக்கு எஸ்.பி., ரகுநாயகம், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர். காலப்பட்டு, பெரியக்கடை, ஒதியன்சாலை, உருளையான்பேட்டை, முத்தியால்பேட்டடை ஆகிய போலீஸ் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவித்தனர். போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தனர்.