/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
/
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
ADDED : பிப் 16, 2025 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு போக்குவரத்து தொடர்பான பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.
பின்னர், பொதுமக்கள் தெரிவித்த குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதேபோல், புதுச்சேரி யில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் எஸ்.பி.,க்கள் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.