தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிேஷகம்

பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிேஷகம்

பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிேஷகம்


ADDED : நவ 22, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, கணபதி நகரில் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் மகா கும்பாபிேஷகம் இன்று (நவ.,22) நடந்தது.

முத்தியால்பேட்டை கணபதி நகரில், பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர், கோடீஸ்வர சாய்பாபா, ஆஞ்சநேயர், சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர், கால பைரவர், விஷ்ணு பாதாள செம்பு அக்னீஸ்வரர், பிரம்மா கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், மகா கும்பாபிேஷக விழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக இன்று காலை 4ம் கால பூஜைகள், தத்துவார்ச்சனை, திரவியாஹூதி, பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, விமான கோபுர கலசங்கள், மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us