ADDED : ஆக 16, 2026 09:02 PM
புதுச்சேரி: மத்திய அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டதை கண்டித்து உப்பளம் தொகுதி தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உப்பளம் தொகுதி தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அனிபால்கென்னடி முன்னிலை வகித்தார். தொகுதி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கட்சி வளர்ச்சி குறித்து கலந்துரையாடினர். கூட்டத்தில், உதயநிதி மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை கைது செய்யப்பட்டதை கண்டிப்பது.
மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற ஜனாபதி வண்ணக்கொடி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்ததை கண்டிப்பது. நிரந்தர சபாநாயகரை நியமிக்க வேண்டும். கட்சியின் தொகுதி செயலாளரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
