/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி
ADDED : அக் 18, 2025 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, ஆளுமை பண்புகளை மேம்படுத்தி கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் (பொ) ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். பேராசிரியர் ஞானாம்பிகை வர வேற்றார்.
பேராசிரியர்கள் ரேவதி, செல்வராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஜென்ரல் ஆப்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கண்ணன், ஆளுமை பண்புகளை எவ்வாறு வளர்த்து கொள்ள வேண்டும் என, மாணவர்களிடம் விளக்கினார்.
நிகழ்ச்சியில், சாரதா கங்காதரன் கல்லுாரி பேராசிரியர் அனுராதா, சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர். உதவிப்பேராசிரியை சப்ரினாமேரி நன்றி கூறினார்.