ADDED : மார் 12, 2026 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் டெரிட்டரி பெத்தாங் அசோசியேஷன் உடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உறுப்பு மாற்று விளையாட்டு சங்கம், பெண்கள் மற்றும் மாணவர்கள் பெத்தாங் மேம்பாட்டு சங்கம் இணையும் விழா நடந்தது.
அசோசியேஷன் தலைவர் ரமேஷ எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாலுசாமி, துணைத் தலைவர்கள் சுந்தர், ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உறுப்பு மாற்று விளையாட்டு சங்கத் தலைவர் பத்ரீஸ் தெலமாஸ், சாகா ஸ்போர்ட்ஸ் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுச் செயலாளர் பாலுசாமி கூறுகையில், 'மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புதுச்சேரியில் பெத்தாங் விளையாட்டை வளர்ச்சியடைய செய்ய விரும்பும் சங்கங்கள் புதுச்சேரி யூனியன் டெரிட்டரி பெத்தாங் அசோசியேஷன் தலைமையில் இணைந்து செயல்பட வரவேற்கப்படுகிறது' என்றார்.

