/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தாங் போட்டி பரிசளிப்பு விழா
/
பெத்தாங் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மே 06, 2025 04:45 AM

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் நடந்த மாநில அளவிலான பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்ற நடந்தது.
ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பத்தில் மாநில அளவிலான பெத்தாங் போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அணிகளும் பங்கு பெற்றனர். ஒரு வார காலம் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி போட்டியில் ப்ளேபாய் அணியை சேர்ந்த அஜித், சதீஷ் ஆகியோர் முதல் பரிசும், சி.எஸ்.பி., அணி அகத்தியன், குமார் ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ராஜ்பவன் தொகுதி காங்., பிரமுகர் குமரன், ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ராஜ்பவன் தொகுதியைச் சார்ந்த காங்., பிரமுகர்கள் ராஜாராம், ராஜ்மோகன், சார்லஸ் முரளி, மோகனசுந்தரம், வசந்த், செந்தில், தமிழ்ச்செல்வன், ராஜேஷ், மகேஷ் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர், ஏற்பாடுகளை எவரெஸ்ட் அணியின் தலைவர் அண்ணாதுரை தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
எவரெஸ்ட் அணியின் தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார்.