பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தந்தையர் தின விழா
பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தந்தையர் தின விழா
ADDED : செப் 14, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, தந்தையர் தின விழா நேற்று நடந்தது.
விழாவில், அமைச்சர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், நாராயணசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, துப்பரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மேலும், பள்ளியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து, புதுமையான முயற்சிகள் மூலம் கல்வி சேவையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் பாஸ்கல் ராஜ்க்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்தனர்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
