sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் இன்று மனு தாக்கல் நிறைவு; நெரிசலை சமாளிக்க 'டோக்கன்' தர முடிவு

/

 புதுச்சேரியில் இன்று மனு தாக்கல் நிறைவு; நெரிசலை சமாளிக்க 'டோக்கன்' தர முடிவு

 புதுச்சேரியில் இன்று மனு தாக்கல் நிறைவு; நெரிசலை சமாளிக்க 'டோக்கன்' தர முடிவு

 புதுச்சேரியில் இன்று மனு தாக்கல் நிறைவு; நெரிசலை சமாளிக்க 'டோக்கன்' தர முடிவு


ADDED : மார் 23, 2026 06:45 AM

Google News

ADDED : மார் 23, 2026 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் குவியும் வாய்ப்பு உள்ளது.

எனவே, கூட்ட நெரிசலை சமாளிக்க, 'டோக்கன்' முறையை பின்பற்ற, தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில், வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மூன்று மாநிலங்களிலும், வேட்புமனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது.

அம்மாநிலங்களில், வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று கடைசி நாளாகும். புதுச்சேரியில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், கடந்த 20ம் தேதி வரை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 118 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

நேற்று முன்தினம் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் ரம்ஜான் விடுமுறை என்பதால், அங்கு மனு தாக்கல் நடை பெறவில்லை.

மாகியில், நேற்று முன்தினம் வேலை நாள் என்பதால், அங்கு ஒருவர், மனு தாக்கல் செய்ததையடுத்து, 30 தொகுதிகளில், நேற்று முன்தினம் வரை 119 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 3:௦௦ மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்தால் மட்டுமே, தேர்தலில் போட்டியிட முடியும்.

தே.ஜ., கூட்டணியில், தொகுதி பங்கீடு முடிந்து, ஒரு தொகுதியை தவிர பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அவர்களில் 12 பேர் மனு தாக்கல் செய்து விட்டனர்.

தி.மு.க., காங்கிரஸ் அடங்கிய 'இண்டி' கூட்டணியில், நேற்று மாலை வரை தொகுதி பங்கீடு முடியவில்லை; இழுபறி நீடித்து, நேற்று இரவு முடிவுக்கு வந்தது.

அந்த கட்சிகளில், இன்றே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இன்றே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 10 முதல் 15 பேர் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க, மனு தாக்கல் அலுவலகங்களில் 'டோக்கன்' முறையை பின்பற்ற தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us