/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி மனு
/
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி மனு
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி மனு
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி மனு
ADDED : மே 08, 2025 01:21 AM

புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டுமென கல்யாணசுந்தரம் தலைமையிலான பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மத்திய அமைச்சரிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி பா.ஜ., பிரமுகர் உமாசங்கரை, சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி கருணா தலைமையிலான கும்பல், கடந்த 26ம் படுகொலை செய்தது. இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ரவுடி கருணா மற்றும் அவரது கூட்டாளிகள் 11 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இருப்பினும் உமாசங்கர் கொலை தொடர்பாக பல்வேறு குழப்பங்களும், மாறுபட்ட கருத்துக்களும் நிலவி வருகிறது.
எனவே, பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ., மூலம் விசாரிக்க வேண்டுமென காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தலைமையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஜான் குமார், விவில்லியன் ரிச்சர்ட்ஸ், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கரன், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நேற்று மத்திய புலனாய்வு துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங்கை, டில்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

