/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க கோரி மனு
/
பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க கோரி மனு
ADDED : நவ 13, 2025 06:53 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் தொகுதியில் மீண்டும் பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கக் கோரி பா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவணன் போக்குவரத்து ஆணையரிடம் மனு வழங்கினார்.
உழவர்கரை தொகுதி, ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், மரியாள் நகர், தேவாநகர், வயல்வெளி நகர், மூலகுளம், ராதாகிருஷ்ணன் நகர், பிச்சவீரன்பேட் , கோபாலன்கடை, முத்துப்பிள்ளைபாளையம் வரை இயங்கிய பி.ஆர்.டி.சி., பஸ் பல மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது.
பி.ஆர்.டி.சி., பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி ரெட்டியார்பாளையம் தேவா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பா.ஜ., மாநில துணைத் தலைவர் உழவர்கரை சரவணன் தலமையில் போக்குவரத்துதுறை ஆணையர் சிவகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

