மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்., தலைவர் போட்டியிட மனு
மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்., தலைவர் போட்டியிட மனு
ADDED : ஜன 10, 2026 05:19 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: மண்ணாடிபட்டு தொகுதியில் காங்., சார்பில், மாநில தலைவர் வைத்திலிங்கம் போட்டியிட தொகுதி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.
மண்ணாடிபட்டு தொகுதியில் காங்., சார்பில், மாநில தலைவர் வைத்திலிங்கம் போட்டியிட வேண்டுமென தொகுதி ஒருங்கிணைந்த வட்டார தலைவர் பரமசிவன் தலைமையில் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.
இதில், மாநில பொதுச் செயலாளர்கள் சுரேஷ், முத்துரங்கம், மாநில செயலாளர் ரகுபதி, மாவட்ட நிர்வாகிகள் அருள் கணேஷ், சந்துரு, மாயகிருஷ்ணன், லோகு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆண்டவர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
