தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இலவச மனைப்பட்டா கேட்டு நரிக்குறவர்கள் முதல்வரிடம் மனு

இலவச மனைப்பட்டா கேட்டு நரிக்குறவர்கள் முதல்வரிடம் மனு

இலவச மனைப்பட்டா கேட்டு நரிக்குறவர்கள் முதல்வரிடம் மனு


ADDED : பிப் 28, 2024 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இலவச மனைப்பட்டா கேட்டு நரிக்குறவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினர்.

வில்லியனுார் பைபாஸில் இருந்து கூடப்பாக்கம் சாலை, மூர்த்தி நகர் அருகே சாலையோரத்தில் ஏராளமான நரிக்குறவர்கள் ஆஸ்பெஸ்டால் ஷீட் போட்ட வீடு கட்டி வசித்து வருகின்றனர். கூடப்பாக்கம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவக்க விழா 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.

மேம்பாலம் கட்டுமானத்திற்காக, கூடப்பாக்கம் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களும், ஒதியம்பட்டு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களும் நேற்று சட்டசபை வந்தனர். அங்கு, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தங்களின் குறைகளை முறையிட்டதுடன், இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இலவச மனைப்பட்டாவும், அங்கு வீடு கட்டி குடியேற ரூ. 5 லட்சம் நிதி அளிப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். அதை ஏற்று நரிக்குறவர்கள் புறப்பட்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us