/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி கல்வித்துறை செயலருக்கு மனு
/
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி கல்வித்துறை செயலருக்கு மனு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி கல்வித்துறை செயலருக்கு மனு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி கல்வித்துறை செயலருக்கு மனு
ADDED : செப் 05, 2025 03:01 AM
புதுச்சேரி: ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுத அனுமதி பெறுவது தொடர்பாக, தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பாட்சா, பொதுச் செயலாளர் தீபக் ஆகியோர் கல்வித்துறை செயலரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் அரசின் அனைத்து நிலை ஆசிரியர்களும், தகுதி தேர்வு எழுத வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இதனால், புதுச்சேரி அரசு ஆசிரியர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் 2011ல் நடைமுறைக்கு வந்தது. அன்றிலிருந்து அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பணி நியமனம் செய்து வருகிறது.
இந்நிலையில், 2011ம் ஆண்டிற்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்கள், அதற்கு முன் வந்த அனைத்து நிலை ஆசிரியர்கள் 2 ஆண்டிற்குள் கட்டாயம் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கூறியுள்ளது.
அதன்படி, வரும் நவம்பரில் தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆகையால், கோர்ட் தீர்ப்பு குறித்து புதுச்சேரி அரசு உடனடியாக ஆலோசித்து, ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாய்ப்பு இல்லாவிட்டால், தமிழக அரசு நடத்தும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில், புதுச்சேரி ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத அனுமதி பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.