/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் பல்கலை கூடத்தில் புகைப்பட கண்காட்சி
/
பாரதியார் பல்கலை கூடத்தில் புகைப்பட கண்காட்சி
ADDED : ஆக 20, 2025 07:35 AM

அரியாங்குப்பம் : பாரதியார் பல்கலைக் கூடத்தில் மாணவர்கள் எடுத்த பல்வேறு புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
உலக புகைப்பட தின விழாவையொட்டி, அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில் புகைப்பட கண்காட்சி நுண்கலைத்துறை சார்பில், நடத்தப்பட்டது.
புகைப்பட கண்காட்சியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார்.
நுண்கலைத் துறை தலைவர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியை சந்திரா விளக்க உரை நிகழ்த்தினார்.
நுண்கலைத்துறை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் எடுத்த அறிவியல் சார்ந்த கலைநயம் மிக்க பல்வேறு புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த புகைப்படங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மாணவி அபர்ணா நன்றி கூறினார்.