தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உடல் பரிசோதனை செய்வது அவசியம் எம்.வி.ஆர்., மருத்துவ மைய டாக்டர் 'அட்வைஸ்'

உடல் பரிசோதனை செய்வது அவசியம் எம்.வி.ஆர்., மருத்துவ மைய டாக்டர் 'அட்வைஸ்'

உடல் பரிசோதனை செய்வது அவசியம் எம்.வி.ஆர்., மருத்துவ மைய டாக்டர் 'அட்வைஸ்'


ADDED : மார் 05, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக உடல் பருமன் தினத்தையொட்டி, எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுச்சேரி எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தின் சார்பில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவ மையத்தின் நிறுவனரும், தலைமை மருத்துவர் வித்யா கூறியதாவது:

உடல் பருமனால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், கொலெஸ்டரால், கல்லீரல்

கொழுப்புநோய், குழந்தையின்மை மேலும் புற்றுநோய் கூட ஏற்படக்கூடும். எனவே உடல்எடை அதிகமாக இருப்பவர்கள் 20 வயதிற்கு மேல் ஆண்டு தோறும் உடல் நல பரிசோதனைகள்செய்துகொள்ளுவது அவசியம்.

உடல் எடை அதிகமாவதற்கு, உடற்பயிற்சியின்மை, போதிய உறக்கம் இல்லாமை, அதிக அளவு கொழுப்பு மற்றும் மாவுசத்து உணவுகள், பேக்கரி பொருட்கள், பிரியாணி, ஐஸ்கிரிம் ஆகியவற்றை உண்பதால் ஏற்படுகிறது.

புதுச்சேரியில் அதிக அளவில் உடல் பருமன் உள்ளவர்கள் இருக்கின்றனர். தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். மாவுசத்து உணவுகளான அரிசி, கோதுமை வகைகளை குறைத்துவிட்டு, புரதசத்தான பருப்புகள்,முட்டை, சுண்டல், வேர்க்கடலை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் உடல் பருமனுக்கான சிறப்பு ஆலோசனை, உடல்ரத்தக் குழாய்கள், உள்ளுறுப்பின் கொழுப்பு அளவு, ஒருவரின் ரத்தக்குழாய்களின் தன்மை, உடல் தன்மை ஆகியவற்றிற்கு சிறப்பு பரிசோதனை செய்து உடற்பயிற்சி, உணவு குறித்த ஆலோசனை வழங்குகின்றோம்.

இவ்வாறு தலைமை மருத்துவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலாளர் தேவதாஸ், உணவியல் ஆலோசனை

நிபுணர்கள் மோகனா , சந்திரவதனி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us