/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிசியோதெரபி சிறப்பு மருத்துவ முகாம்
/
பிசியோதெரபி சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : பிப் 19, 2025 04:09 AM

திருக்கனுார் : கோரிமேடு மதர் தெரேசா முதுகலை பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவன பிசியோதெரபி கல்லுாரி சார்பில், சிறப்பு பிசியோதெரபி மருத்துவ முகாம் நடந்தது.
காட்டேரிக்குப்பம், அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, தலைமை ஆசிரியர் சீனுவாசன் வரவேற்றார். மதர் தெரேசா முதுகலை பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவன டீன் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் சுப்ரியா தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்து, மருந்து, மாத்திரைகளின்றி, உடற்பயிற்சி, நல்ல உணவு முறைகள் மூலமாக, நோய்கள் வரமால் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மருத்துவ அதிகாரிகள் அரிபிரியா, ஜானகிராமன் ஆகியோர், பிசியோதெரபி சிகிச்சை முறைகள், அதன் நன்மைகள் குறித்து பேசினர்.
முகாமில், கல்லுாரியின் இறுதியாண்டு மாணவர்கள், பொதுமக்களுக்கு சுவாச பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
பா.ஜ., பிரமுகர்கள் மோகன்ராஜ், ராஜா, ஜெயக்குமார், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

