/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கான தாவர மருத்துவ பயிற்சி முகாம்
/
விவசாயிகளுக்கான தாவர மருத்துவ பயிற்சி முகாம்
ADDED : ஏப் 15, 2025 04:20 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கான பூச்சி தடுப்பு குறித்த தாவர மருத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவிகள், கல்லுாரி முதல்வர் மொகமத் யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் காட்டேரிக் குப்பத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, லிங்காரெட்டிப்பாளையம் விவசாயிகளுக்கான பூச்சி தடுப்பு குறித்த தாவர மருத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
இதில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சரவண ராம் உடன் இணைந்து மாணவிகள், விவசாய வயலில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்கம், அதன் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
முகாமில், விவசாயிகள் தங்கள் வயலில் ஏற்பட்ட பூச்சி மற்றும் நோய் தாக்கிய தாவர மாதிரிகளை கொண்டு வந்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.