/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., இ.சி.ஆரில் மறியல்; 100 பேர் கைது

ADDED : பிப் 22, 2024 11:42 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி, சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்ற மா.கம்யூ., கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து, அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில், கடந்த, 19ம் தேதி முதல் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று, 4வது நாளாக நடந்த போராட்டத்தில், மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.
இந்நிலையில், மதியம் 12:30 மணிக்கு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கொக்கு பார்க் பகுதியில் இருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி, கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்திய படி, புறப்பட்டனர்.
உடன் கோரிமேடு போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், இ.சி.ஆரில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், ராமச்சந்திரன் உள்ளிட்ட, 100 பேரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் டி.நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சிறிது நேரத்திற்கு பின், விடுவிக்கப்பட்டனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.