குழாய் மூலம் வீடுகளுக்கு காஸ்: காரைக்காலில் துவக்கி வைப்பு
குழாய் மூலம் வீடுகளுக்கு காஸ்: காரைக்காலில் துவக்கி வைப்பு
UPDATED : ஜூலை 16, 2026 05:56 PM
ADDED : ஜூலை 16, 2026 05:51 PM
காரைக்கால்: காரைக்காலில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்யும் திட்டத்தை நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்யும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. அதன்படி, காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் துாரத்திற்கு தனியார் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனம் மூலம் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பச்சூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்யும் திட்டத்தை நாஜிம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பின், அவர், கூறுகையில், 'வீடுகளில் குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யும் திட்டத்தில், வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் காஸ் ஒரு கியூபிக் மீட்டர் 52 ரூபாய், வணிக பயன்பாட்டிற்கு ஒரு கியூபிக் மீட்டர் 69 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் காஸிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இத்திட்டத்தில், 100 முதல் 150 ரூபாய் வரை சேமிக்க முடியும்' என்றார்.
