/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிக்னலில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலி பெருக்கி இயக்கி வைப்பு
/
சிக்னலில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலி பெருக்கி இயக்கி வைப்பு
சிக்னலில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலி பெருக்கி இயக்கி வைப்பு
சிக்னலில் புதிதாக அமைக்கப்பட்ட ஒலி பெருக்கி இயக்கி வைப்பு
ADDED : அக் 26, 2024 06:08 AM

புதுச்சேரி: ராஜிவ்காந்தி சிக்னலில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த புதிதாக அமைக்கப்பட்ட ஒலிபெருக்கியை சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி நேற்று இயக்கி வைத்தார்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இன்னர் வீல் கிளப் ஆப் பாண்டிச்சேரி மகளிர் ஒருங்கிணைப்பு சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பிட்டில் ஒரு ஆம்பிளிபைர், மைக், 5 கூம்பு ஒலி பெருக்கிகள் வழங்கப்பட்டு, சிக்னல்களில் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளது.
இதனை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று இயக்கி வைத்தார்.
இதில், எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், இன்னல்வெல் கிளப் தலைவி அம்புஜவள்ளி, செயலாளர் சுமிதா, கிளப் உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சிக்னல்களில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.