/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
/
வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜன 25, 2024 04:10 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆரிய வைசிய எஜூகேஷனல் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா இணைந்து, வரும் 4ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் வரும் 4ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, இன்ஜினியரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் தகுதியுள்ளவர்களுக்கு உடனடிாக பணி வழங்கப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு வாசவி இன்டனர்நேஷனல் பள்ளி நிர்வாகத்தை நேரில் அனுகவும்.