/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'14 ஆயிரம் மாணவிகளுக்கு எஸ்.பி.வி., தடுப்பூசி இலவசமாக செலுத்த திட்டம்'
/
'14 ஆயிரம் மாணவிகளுக்கு எஸ்.பி.வி., தடுப்பூசி இலவசமாக செலுத்த திட்டம்'
'14 ஆயிரம் மாணவிகளுக்கு எஸ்.பி.வி., தடுப்பூசி இலவசமாக செலுத்த திட்டம்'
'14 ஆயிரம் மாணவிகளுக்கு எஸ்.பி.வி., தடுப்பூசி இலவசமாக செலுத்த திட்டம்'
ADDED : பிப் 26, 2026 04:54 AM
புதுச்சேரி: கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் தடுக்க எஸ்.பி.வி., தடுப்பூசி 14 ஆயிரம் மாணவிகளுக்கு இலவசமாக செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் கூறியதாவது:
இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் பெண்களின் கர்ப்பவாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த புற்றுநோய் 99.7 சதவீதம் மனித எச்.பி.வி., வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த புற்றுநோயை எச்.பி.வி., தடுப்பூசி செலுத்துவதன் மூலம் முழுமையாக தடுக்க முடியும். இந்த தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் துவக்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ் 14 முதல் 15 வயதிற்கு உட்பட சிறுமிகளுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரம் மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வரும் 8ம் தேதி முதல் 3 மாதத்திற்கு வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த தடுப்பூசிகள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே மாணவிகளுக்கு செலுத்தப்படும்.
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல்தான் உள்ளது. பறவை காய்ச்சல் அறிகுறி ஏதுவும் இல்லை. அவ்வாறு ஏற்பட்டால் எதிர்கொள்ளும் வகையில் கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன' என்றார்.
பேட்டியின் போது, மாநில சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கோவிந்தராஜ், துணை இயக்குநர் ரகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

