பராமரிப்பு பணிகள் காரணமாக கோளரங்க காட்சி தற்காலிக ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக கோளரங்க காட்சி தற்காலிக ரத்து
ADDED : மார் 13, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கோளரங்க காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், முனைவர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
முனைவர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கோளரங்க காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன், கோளரங்க காட்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இருப்பினும் அறிவியல் மையம் மற்றும் புத்தாக்க மையம் வழக்கம்போல் செயல்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
