/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மலர் கண்காட்சி செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்
/
புதுச்சேரியில் மலர் கண்காட்சி செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்
புதுச்சேரியில் மலர் கண்காட்சி செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்
புதுச்சேரியில் மலர் கண்காட்சி செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்
ADDED : டிச 12, 2025 05:44 AM

புதுச்சேரி: தேர்தலை முன்னிட்டு அடுத்த மாதம் புதுச்சேரியில் மலர் கண்காட்சி நடக்கவுள்ளது.
புதுச்சேரி வேளாண்துறை சார்பில், 35வது ஆண்டு மலர், காய், கனி கண்காட்சி ஜன., 30, 31, பிப்., 1 ஆகிய மூன்று நாட்கள் தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ளது. இதில், ஜினிய, செலோஸ்ஷி யா, சால்வியா, பெட்டுனியா, வெர்பினா, டொரோனியா, டயான்டஸ், பால்சம், காஸ்மஸ், கேலன்டுலா, வின்கா, ஸ்னாப்டிராகன், காம்ப்ரினா, மேரிகோல்டு உள்ளிட்ட 20 வகையான மலர் செடிகளில், 35,000 செடிகள் அமைக்கப்படுகின்றன.
அதையொட்டி, வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு லாஸ்பேட்டை நர்சரியில் இந்த மலர் செடிகள் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தாவரவியல் பூங்காவில் உள்ள 'மலர் படுகை' வளாகத்தில் 1000 'மேரி கோல்டு' மலர் செடிகள் நேற்று முன்தினம் நடவு செய்யப்பட்டது.
வருடம் தோறும் பிப்., மாதம் முதல் வாரத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருவது மற்றும் ஜன., மாதத்தில் பனி காலத்தின் குளிரான சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜனவரியில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது என, தாவரவியல் பூங்கா ஊழியர்கள் கூறினர்.

