தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வலையில் சிக்கிய பிளாஸ்டிக் குப்பைகள்: புதுச்சேரியில் மீனவர்கள் அதிர்ச்சி

வலையில் சிக்கிய பிளாஸ்டிக் குப்பைகள்: புதுச்சேரியில் மீனவர்கள் அதிர்ச்சி

வலையில் சிக்கிய பிளாஸ்டிக் குப்பைகள்: புதுச்சேரியில் மீனவர்கள் அதிர்ச்சி


ADDED : அக் 24, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 07:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கவர்னர் மாளிகைக்கு பின்புறம் உள்ள கடலில் பாரம்பரிய முறையில் கரைவலை வீசி மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள் வலையில், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக அளவில் இருந்ததால், அதிர்ச்சியடைந்தனர்.

புதுச்சேரியின் கடற்கரைப் பகுதிகளில் நவீன இயந்திரப் படகுகள் மட்டுமின்றி, பல மீனவர்கள் இன்றும் தங்களின் பாரம்பரிய மீன்பிடி முறையான 'கரைவலை வீசும்' தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இன்று (அக்.,24) காலை வழக்கம் போல், குருசுகுப்பம் கடற்கரைப் பகுதியில், தற்போதைய கவர்னர் மாளிகை பின்புறம் மீனவர்கள் சிலர் கடலுக்குச் செல்லாமல், கரையில் நின்றுகொண்டே வலை வீசி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர்.

அவர்கள் வீசிய வலைகளின் எடை அதிகரித்ததால், அதிக மீன்கள் சிக்கியள்ளதாக மகிழ்ச்சியடைந்த மீனவர்கள், வலையை கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த படி மீன்களுக்கு பதிலாக வலையில் சிக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வலைகள் முழுதும் மீன்களை விட மக்கள் பயன்படுத்தித் துாக்கி எறிந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மக்காத குப்பைகளே பெருமளவில் சிக்கி இருந்தன.

நகர் முழுதும் பொதுமக்கள் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள், மழைநீருடன் வாய்க்கால்களில் அடித்துச் செல்லப்பட்டு நேரடியாகக் கடலில் கலக்கின்றன. இதன் காரணமாக கடலின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, கடல்நீரும் நாளுக்கு நாள் அசுத்தமடைந்து வருகிறது.

குறிப்பாக, கரைப்பகுதிகளில் கரைவலை வீசும் மீனவர்களுக்கு மீன்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குப்பைகள் வலையில் சிக்குவது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தடுக்க நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், புதுச்சேரியின் கடற்கரைச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us