/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 22, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், பா.ம.க., உழவர் பேரியக்கம் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, தமிழக உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, செயலாளர் வேலுசாமி பேசினர்.
கூட்டத்தில், திருவண்ணாமலையில், டிச. 21ம் தேதி நடக்கும் உழவர் பேரியக்க மாநாட்டில் திரளாக பங்கேற்பது. விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
மகாபலிபுரத்தில் 12 ஆண்டிற்கு பின் வன்னியர் சங்க இளைஞர் மாநாடு நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.