தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு பா.ம.க., நிர்வாகிகள் ஆதரவு

பாகூர் என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு பா.ம.க., நிர்வாகிகள் ஆதரவு

பாகூர் என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு பா.ம.க., நிர்வாகிகள் ஆதரவு


ADDED : மார் 31, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்., சார்பில், போட்டியிடும் தியாகராஜன் நேற்று, வண்ணாங்குளம், கொரவள்ளிமேடு உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு கால தே.ஜ., கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு கல்வீடு கட்டும் திட்டம் நிதியை உயர்த்தியது. மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை, லேட் டாப் போன்ற சாதனை திட்டங்கள் தொடர்ந்திட முதல்வர் ரங்கசாமியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திட வேண்டும்.

அதற்கு, இந்த தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிடும் எனக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டுகள் போட்டு வெற்றி பெற செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, வேட்பாளர் தியாகராஜனை, பா.ம.க., தலைவர் அன்புமணி ஆணைப்படி, புதுச்சேரி பா.ம.க., மாநில துணை தலைவர் சத்யா, மண்டல அமைப்பாளர் கோபி, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் செல்வி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us