ADDED : நவ 11, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் ; புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் அச்சுதன், 37; மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ம.க., செயலர். இவர், திருபுவனையில் உள்ள வாஷிங்மெஷின், 'ஏசி' பிரிட்ஜ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பணி முடிந்து சன்னியாசிக்குப்பம் வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
கண்டமங்கலம், சேஷாங்கனுார் அடுத்த எஸ்.ஆண்டிப்பாளையம் ஐயனார் கோவில் அருகே பைக்கில் வந்த மர்ம கும்பல், அச்சுதனை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.
அவ்வழியே சென்றவர்கள் அச்சுதனை மீட்டு, ஜிப்மர் மருத்துமனையில் சேர்த்தனர்.