/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிங்கப்பட்டு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
/
ஆதிங்கப்பட்டு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
ADDED : நவ 18, 2025 05:40 AM

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், போக்சோ விழிப்புணர்வு, பழங்குடியின வீரர் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் விழா, குழந்தைகள் தின விழா என முப்பெரும் நடந்தது.
தலைமையாசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் பங்கேற்று, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொமைகள் மற்றும் குற்றங்கள் குறித்து பேசினார்.
பழங்குடியின வீரரான பகவான் பிர்சா முண்டா வின் பிறந்த நாளையொட்டி, பழங்குடியின மக்களின் வீரத்தினையும் பங்களிப்பையும் போற்றும் விதமா கவும், குழந்தைகள் தினத்தையொட்டியும், மாணவர்கள் பழங்குடியினர் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

