/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் அரசுப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
/
பாகூர் அரசுப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
ADDED : நவ 21, 2025 05:47 AM

பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். சட்ட உதவியாளர் ஜமுனாரவி பங்கேற்று, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்தும், குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் குற்றங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து விளக்கினார். 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, உமா மகேஸ்வரி, சங்கீதா, செல்வி, ரம்யா, கார்த்திகேயன், சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை பிரபாவதி நன்றி கூறினார்.

