UPDATED : நவ 25, 2026 11:06 PM
ADDED : நவ 25, 2026 11:06 PM

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொறுப்பாசிரியர் செல்வி வெர்ஜினியா வரவேற்றார். கிருமாம்பாக்கம் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், பெண் காவலர் செவந்தி ஆகியோர் பங்கேற்று பேசுகையில், ‘குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் உடனடியாக பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ, அல்லது போலீசாரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றனர். மேலும், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தனிமையில் அந்நியர்களிடம் பேசக் கூடாது என்பது குறித்தும், மொபைல் போனில் வரும் தவறான வீடியோக்கள், மெசேஜ்களை பெற்றோரிடம் காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மற்றும் காவல் உதவி எண் 100 ஆகியவற்றை மாணவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என, தெரிவித்தவர். மாணவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். ஆசிரியர் ரகுநாதன் நன்றி கூறினார்.
