ADDED : பிப் 07, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: 17 வயது சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாகூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி கல்லுாரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் விசாரித்தனர். மாயமான மாணவி, சிறுவன் ஒருவரை காதலித்ததும், அவரது வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், போக்சோ பிரிவின் கீழ், 17 வயது சிறுவன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

