ADDED : ஜன 14, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருக்கனுார் அடுத்த வாதானுார் ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் பிரதாப், 27. இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். தற்போது அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர், பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மகளிர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்ததில், அவர் மைனர் என தெரியவந்தது.
இதையடுத்துதிருக்கனுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் பெண்ணின் உறவினர்களிடம் புகார் பெற்று போக்சோ வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள பிரதாப்பை தேடி வருகின்றனர்.

