/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா
/
கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா
ADDED : செப் 22, 2024 02:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி கவிஞர் தமிழ்ஒளி கல்வி வட்டம் சார்பில் தமிழ்ஒளி நுாற்றாண்டு விழா, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் செல்வம் வரவேற்றார். தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா குழு தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் அரசு ஊழியர்களின் சங்க தலைவர் மேகராஜ் முன்னிலை வகித்தனர்.
வக்கீல் லெனின் துரை, ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் நோக்கவுரையாற்றினார். கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள், கோட்டக்குப்பம் அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி கலந்துரையாடினார். பேராசிரியர் பஞ்சாங்கம், மக்கள் கவிஞர் தமிழ்ஒளி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் ஜானி நன்றி கூறினார்.