/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை பள்ளியில் கவியரங்கம்
/
லாஸ்பேட்டை பள்ளியில் கவியரங்கம்
ADDED : ஆக 04, 2025 11:02 PM

புதுச்சேரி: புதுச்சேரி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கலாம் நினைவு நாள் கவியரங்கம் நடைபெற்றது.
லாஸ்பேட்டையில் உள்ள புதுவை பப்ளிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, இயக்க நிறுவனர் கலைவரதன் தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாளர் சங்கீதா, செயலாளர் கலைவாணி, நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர். சீனுவேணுகோபால், கலை பண்பாட்டு துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், திருவாதிரை நாட்டியாலயா நிறுவனர் திரிபுரசுந்தரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, ரத்தினவிநாயகம் வரவேற்றார். தொடர்ந்து, 'மாணவர் கண்கள் காமராஜர் - கலாம்' தலைப்பில் கட்டுரை, கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் கிருஷ்ணா, உதவி பேராசிரியர் கயல்விழி முன்னிலையில், போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கவிஞர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுரை, கவிதை வாசித்தனர். கட்டுரை, கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. புவனா நன்றி கூறினார்.

