/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷம் கலந்த அரிசி: 20 கோழிகள் பலி
/
விஷம் கலந்த அரிசி: 20 கோழிகள் பலி
ADDED : ஜூலை 21, 2025 05:10 AM

திருக்கனுார் : சுத்துக்கேணியில் விஷம் கலந்த அரிசியை சாப்பிட்ட 20 கோழிகள் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி, மெயின் ரோட்டை சேர்ந்தவர் வாழ்முனி, 48; விவசாயி.
இவர், தனது வீட்டில் 25க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் வளர்த்து வந்த 20 கோழிகள் நேற்று காலை 4:00 மணிக்கு வீட்டின் வாசலில் இறந்து கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த வாழ்முனி, கோழிகள் இறந்து கிடந்த இடங்களை பார்வையிட்டபோது, கோழிகளுக்கு மர்ம நபர்கள் அரிசியில் விஷம் கலந்து கொடுத்துகொன்றிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கோழிகள் இறப்பு குறித்து விசாரித்து , அங்கு கிடந்த விஷம் கலந்த அரிசியை கைப்பற்றினர்.
இதுகுறித்து, வாழ்முனி புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, கோழிககளை கொன்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.