/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை அருகே விஷ வண்டுகள் அழிப்பு
/
திருபுவனை அருகே விஷ வண்டுகள் அழிப்பு
ADDED : மே 07, 2025 01:00 AM

திருபுவனை: திருபுவனை அருகே 100 நாள் வேலையின்போது பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினர் அழித்தனர்.
திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் உள்ள பாலக்குட்டையில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் துார் வாரும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் கிராம மக்கள் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள இலவம் பஞ்சு மரம் மற்றும் சவுக்குத் தோப்பில் இருந்து விஷ வண்டுகள், 100 நாள் வேலை செய்தவர்களை துரத்தி கொட்டியது. 10 பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவலறிந்த திருபுவனை தீயணைப்பு வீரர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று விஷ வண்டுகளை அழித்தனர்.