/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர் விளையாட்டு பூங்காவில் புதர்மண்டி விஷ பூச்சிகள் நடமாட்டம்
/
சிறுவர் விளையாட்டு பூங்காவில் புதர்மண்டி விஷ பூச்சிகள் நடமாட்டம்
சிறுவர் விளையாட்டு பூங்காவில் புதர்மண்டி விஷ பூச்சிகள் நடமாட்டம்
சிறுவர் விளையாட்டு பூங்காவில் புதர்மண்டி விஷ பூச்சிகள் நடமாட்டம்
ADDED : பிப் 06, 2025 06:57 AM

காரைக்கால்; காரைக்காலில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா வில் புதர் மண்டியுள்ளதால் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் அருகில் வசிப்போர் அச்சமடைகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தலத்தெரு வேளாண்துறை அலுவலகம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. பூங்காவை சுற்றி 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு இப்பகுதி சிறுவர்கள் விளையாடி மகிழ்வது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் பழுதடைந்து வீணாகி வருகின்றன.
மழைக் காலங்களில் சிறுவர் பூங்காவில் மழைநீர் சூழ்ந்து, புதர் மண்டி விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், அருகில் வசிப்பவர்கள் அச்சமடைகின்றனர். பூங்காவை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மேலும் இரவு நேரத்தில் பூங்கா குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.