தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிம்மில் ஸ்பா கேமரா உள்ளதா? போலீசார் தீவிர விசாரணை

ஜிம்மில் ஸ்பா கேமரா உள்ளதா? போலீசார் தீவிர விசாரணை

ஜிம்மில் ஸ்பா கேமரா உள்ளதா? போலீசார் தீவிர விசாரணை


UPDATED : செப் 16, 2026 09:42 PM

ADDED : செப் 16, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 09:42 PM ADDED : செப் 16, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிம்மிற்கு வந்த பெண்ணிடம் ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில், அவர் பயிற்சி பெற்ற ஜிம்மில் ஸ்பை கேமரா உள்ளதா என, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, திருக்கனுார் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 35. இவருக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்திற்கு திருமணமான பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்ய வந்தபோது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வந்த ஒருவருடன், நட்பு ஏற்பட்டு நாளடைவில் நெருக்கமாக பழகி வந்தார். இந்நிலையில், ஜிம் உரிமையாளர் பிரசாந்த், பயிற்சிக்கு வந்த பெண்ணும், அந்த நபரும் நெருங்கமாக இருக்கும் வீடியோவை பார்த்தார்.

இதையடுத்து, ஜிம் உரிமையாளர் பிரசாந்த் மற்றும் பெண்ணுடன் பழகிய நபர் இருவரும் இணைந்து அந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காண்பித்து ரூ. 50 லட்சம் கேட்டனர். பணம் தர மறுத்தால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர்.

இது குறித்து அப்பெண்ணின் தந்தை அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், பணம் கேட்டு மிரட்டியதாக ஜிம் உரிமையாளர் பிரசாந்த் மீது மட்டும் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, ஜிம்மில் ஏதேனும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, அதன் மூலம் பெண்களை வீடியோ எிடுத்து மிரட்டி உள்ளனரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., கலைவாணன், நேற்று மாலை அந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து உண்மை சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இதற்கிடையே, தமிழக பகுதியில் இருந்து இந்த ஜிம்மிற்கு யாரேனும் பெண்கள் பயிற்சிக்கு சென்றுள்ளனரா, அவர்களில் யாரையெனும் இதுபோல் வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனரா என தமிழக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us