/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டண உயர்வு எதிரொலி டோல்கேட்டில் போலீஸ் குவிப்பு
/
கட்டண உயர்வு எதிரொலி டோல்கேட்டில் போலீஸ் குவிப்பு
ADDED : நவ 16, 2024 04:52 AM

வானுார் : பட்டானுார் டோல் கேட்டில் கட்டண உயர்வால் டிரைவர்கள் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள பட்டானுார் டோல் கேட்டில் அனைத்து வாகனங்களுக்கும் கடந்த 4ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது.
உள்ளூர் வாசிகளுக்கான வாகனங்கள் 20 கி.மீ., துாரத்திற்குள் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.150ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தப்பட்டதால், உள்ளூர் சுற்றுலா கார் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் அவர்களிடம் ஆரோவில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கட்டண உயர்வு குறைப்பு குறித்து, கலெக்டர், எஸ்.பி., மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் முறையான கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இருப்பினும், டிரைவர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க தினமும் சுங்கச்சாவடியை கடக்கும் சுற்றுலா கார் ஓட்டுநர்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.35 மட்டும் வசூல் செய்வதற்கும், அவர்கள் கொடுக்கும் கார் பதிவெண்களுக்கு மட்டுமே அந்த தொகை அனுமதிக்கவும், டோல்கேட் நிர்வாகத்தினருடன் பேசி முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும், நேற்று ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததின் பேரில், பட்டானுார் டோல்கேட்டில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

