/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுபோதையில் தாறுமாறாக பள்ளி வாகனம் ஓட்டிய டிரைவர் மடக்கி பிடித்த போலீசுக்கு பாராட்டு

ADDED : ஜன 22, 2025 06:31 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோ, வேன் மற்றும் டாடா மேஜிக் வாகனங்கள் மூலம் பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். நேற்று மாலை 4:30 மணிக்கு, உப்பளம் அம்பேத்கர் சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி வந்த டாடா மேஜிக் வாகனம் (டி.என்.01.பி.டி.5376)சாலையில், தாறுமாறாக சென்றது.
இதை பார்த்துவாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓரம் சென்றனர். அப்போது, கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார்.
மாணவர்கள் ஏற்றி சென்ற வாகனம் தாறுமா றாக செல்வதை அறிந்து, சேனாம்பாளையம் சந்திப்பு அருகே மடக்கி விசாரித் தார். கோவிந்தசாலையைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த வேலு, 37; அளவுக்கு அதிகமான மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
அவரை, போலீஸ் நிலையம் அழைத்து சென்று பிரித் அனலைசர் மூலம் சோதனை செய்தனர். அதில், 299 எம்.ஜி., அளவுக்கு மதுபோதை என காண்பித்தது.
போக்குவரத்து கான்ஸ்டபிள் மூலம் டாடா மேஜிக் வாகனம் இயக்கி, மாணவர்களை அவர்களின் வீடுகளில் இறக்கி விட்டனர்.
டிரைவர் ஆனந்தவேலு மீது அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவின் கீழ் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து,வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டினர்.