தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவல் புகார் ஆணைய புதிய நிர்வாகிகள்: கவர்னர் கைலாஷ்நாதனிடம் வாழ்த்து

 காவல் புகார் ஆணைய புதிய நிர்வாகிகள்: கவர்னர் கைலாஷ்நாதனிடம் வாழ்த்து

 காவல் புகார் ஆணைய புதிய நிர்வாகிகள்: கவர்னர் கைலாஷ்நாதனிடம் வாழ்த்து


ADDED : டிச 23, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காவல் புகார் ஆணைய புதிய நிர்வாகிகள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு மாநிலமும், காவல்துறை அதிகாரிகளின் மீதான புகார்களை விசாரித்து மேல் நடவடிக்கைக்காக அறிக்கை ஒன்றினை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்க வேண்டி மாநில காவல்துறை அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையம் ஒன்றினை அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் காவல் புகார் ஆணையம், கவர்னர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டது.

இந்த புதுச்சேரி காவல்புகார் ஆணையத்தின் தலைவராக தற்போது ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி வாசுகி, உறுப்பினர்களாக முன்னாள் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி அசோகன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த ஆணையத்தில் காவல் துறை அதிகாரிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரின் சார்பாக அதிகாரம் பெற்றவர், அல்லது தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை புகார் அளிக்கலாம்.

இது மட்டுமின்றி எந்த வகை ஒழுங்கீனங்களை தானே முன்வந்து புகார் களைய் பதிவு செய்து ஆணை யம் விசாரிக்கலாம். மேலும், காவல் அதிகாரிகள் மீதான புகாரின் அடிப்படையில், தனி நபரிடமோ அல்லது அதிகாரம்படைத்தவரிடமோ தகவல்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடலாம்.

புகாரினை விசாரித்தபின் முடிவினை எடுப்பதற்கு தேவைப்பட்டால், காவல் தலைமையகத்தில் வேறு ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருப்பின் கேட்கப்பெற்று மறு ஆய்வு செய்து முடிவுனை எடுக்கலாம். நேரடியான விசாரணை செய்து, முடிவினை காவல் தலைமையகத்திற்கு அனுப்பி அதன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும் அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் உத்தரவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us