தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரெஸ்ட்டோ பார், பப்புகளில் போலீசார் அதிரடி சோதனை

ரெஸ்ட்டோ பார், பப்புகளில் போலீசார் அதிரடி சோதனை

ரெஸ்ட்டோ பார், பப்புகளில் போலீசார் அதிரடி சோதனை


UPDATED : நவ 01, 2026 07:12 PM

ADDED : நவ 01, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 07:12 PM ADDED : நவ 01, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்ட்டோ பார், பப்புகளில் போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சில சுற்றுலா பயணிகள் மதுபோதையை தாண்டி, சட்டவிரோத போதைப்பொருட்களை தேடி அலைவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

குறிப்பாக நகரில் உள்ள பிரபல ரெஸ்ட்டோ பார் மற்றும் பப்புகளில் இத்தகைய போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து, போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கலால் துறை அதிகாரிகள் மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள ரெஸ்ட்டோ பார், பப்புகளில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட பிற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா அல்லது விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க இதுபோன்ற திடீர் சோதனைகள் வரும் நாட்களிலும் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us