ADDED : ஜன 20, 2025 06:20 AM

புதுச்சேரி: குடியரசு தினத்தையொட்டி ஒதியன்சாலை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாடு முழுதும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதையொட்டி, புதுச்சேரியில் மாநில எல்லை மற்றும் நகரப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் புஸ்சி வீதி - செஞ்சி சாலை சந்திப்பில் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த வழியாக வந்த வாகனங்களை மடக்கி சோதனையிட்டனர். மேலும் தங்கும் விடுதிகளிலும் ஆய்வு நடத்தினர். இதில் விடுதியின் நிர்வாகிகளிடம், 'தங்குபவர்களின் விவரங்கள்,சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவரின் அடையாள அட்டை நகலை கேட்டுப்பெற வேண்டும்' என, அறிவுறுத்தினர்.