/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வாழ்த்து
/
ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வாழ்த்து
ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வாழ்த்து
ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வாழ்த்து
ADDED : ஜன 17, 2025 06:07 AM

திருபுவனை: மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கரும்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கடந்த 12ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி முழுவதும் நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருபுவனை போலீசார் மற்றும் வில்லியனுார் போக்குரவத்து போலீசார் மதகடிப்பட்டு மேம்பாலம் நான்கு முறை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் கரும்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை, ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.