/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேரு வீதி வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை
/
நேரு வீதி வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை
ADDED : அக் 16, 2024 05:08 AM

புதுச்சேரி : நேரு வீதியில் பார்க்கிங் தொடர்பாக வியாபாரிகளுடன் போக்குவரத்து போலீசார் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி நேரு வீதியில் நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி, பொருட்கள் வாங்க வரும் பொது மக்களுக்காக நேரு வீதியில் மாலை நேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரு வீதியில் பார்க்கிங் ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக வியாபாரிகளுடன் போக்குவரத்து போலீசார் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், கிழக்கு போக்குவரத்து எஸ்.பி., செல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேரு வீதி வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நேரு வீதி வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும், பழைய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
இரு பக்கத்திலும் பார்க்கிங் செய்ய கூடாது. பார்க்கிங் இடத்திற்கு நேரு வீதி வழியாக செல்லும் வாகனங்கள், கொசக்கடை வீதி வழியாக வெளியே வரவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.