/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு
/
போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு
ADDED : ஜூலை 24, 2025 03:37 AM
புதுச்சேரி: கோரிமேட்டில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் கிரிக்கெட் மைதானத்தை டி.ஜி.பி., ஷாலினி சிங் திறந்து முதல் போட்டியை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, கோரிமேட்டில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமை தாங்கி, கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இதில், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவின்குமார் திரிபாதி, நித்யா ராதாகிருஷ்ணன், அனிதா ராவ் உள்ளிட்ட எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மைதானம் திறப்பை முன்னிட்டு, செய்தியாளர்கள் - போலீசார் இடையே 8 ஓவர் கிரிக்கெட் போட் டி நடந்தது. அதில், முதலில் ஆடிய செய்தியாளர்கள் அணி 8 ஓவருக்கு 6 விக்கெட்கள் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய போலீஸ் அணி 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு டி.ஜி.பி., ஷாலினி சிங் பரிசுகள் வழங்கினார்.