/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணின் உயிரை காக்க போலீசார் ரத்ததானம்
/
பெண்ணின் உயிரை காக்க போலீசார் ரத்ததானம்
ADDED : செப் 25, 2025 11:30 PM

புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காக்க, ரத்ததானம் செய்த சைபர் கிரைம் போலீசாரை சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
புதுச்சேரி போலீஸ் சார்பில், இரு வார சேவை வாரத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், டெங்கு காய்ச்சலால் பாதித்து, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு உடனடியாக 3 யூனிட் ரத்தம் தேவைப்படுவதாக தகவல் வெளியானது.
இதனை அறிந்த, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ்காரர் நந்தகுமார், செல்வகுமார், அஜித்குமார், சதீஷ்குமார் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தனர். பெண்ணின் உயிரை காத்திட ரத்த தானம் செய்த போலீசாரை சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.